இந்தியாவின் காஸ்ட்லி நகரம் மும்பையாம்.. மலிவான நகரம் எது தெரியுமா, சென்னை எப்படி?
வாழ்வதற்கு உகந்த நகரங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது.
உகந்த நகரங்கள்
பிரபல பிராப்பர்டி கன்சல்டிங் நிறுவனமான நைட் ஃபிராங்க் இந்திய நகரங்கள் குறித்த பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிடுவது வழக்கம்.
அதன்படி, தற்போது இந்தியாவிலேயே வாழ மிகவும் காஸ்ட்லியான நகரமாக மும்பை இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அங்கு, அதிக இஎம்ஐ தொகை செலுத்த வேண்டியுள்ளது.
பட்டியல் வெளியீடு
ஒரு நகரில் ஈஎம்ஐ என்பது வருமானத்தில் 50%க்கு மேல் இருக்கிறதோ அது விலையுயர்ந்த, அனைவரும் வீடு வாங்க முடியாத நகரமாகக் கருதப்படும். இரண்டாவது காஸ்ட்லி சிட்டியாக ஹைதராபாத் உள்ளது. அங்கே வருமானத்தில் சுமார் 31 சதவீதத்தை ஒருவர் ஈஎம்ஐ-க்கு செலுத்த வேண்டு உள்ளது.
3வது இடத்தில் டெல்லி- என்சிஆர். வருமானத்தில் 30 சதவீதத்தை ஈஎம்ஐ தொகையாகக் கட்ட வேண்டி உள்ளது. பெங்களூரு மற்றும் சென்னை நான்காவது இடத்தில் உள்ளது. வருமானத்தில் 28 சதவீத ஈஎம்ஐ-க்கு கட்ட வேண்டி உள்ளது. அடுத்ததாக புனே மற்றும் கொல்கத்தா 26 சதவீதத்துடன் இருக்கிறது.
இந்நிலையில், அகமதாபாத் தான் இந்தியாவில் வாழ்வதற்கு மிகவும் மலிவான நகரமாக பார்க்கப்படுகிறது. 23 சதவீதத்தை ஈஎம்ஐக்கு செலுத்தினால் போதும் என்ற நிலையே இருக்கிறது.