வரலாறு காணாத சரிவில் இந்திய ரூபாய்; தொடர் சவால்கள் - மக்களுக்கு என்ன பாதிப்பு
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வகையில் சரிவை கண்டுள்ளது.
ரூபாயின் மதிப்பு
அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றி, அன்னிய முதலீடுகள் வெளியேற்றம், உள்நாட்டு பங்குச் சந்தையில் நிலவும் சுணக்கத்தை தொடர்ந்து டாலரின் மதிப்பு வலுப்பெற்று வருகிறது.
எனவே, ரூபாயின் மதிப்பு நெருக்கடியை தொடர்ந்து சந்தித்து வருகிறது. டாலர் மதிப்பு வலுவடைந்தால் வெளிநாட்டில் இருந்து அதிகளவில் பொருட்கள் மற்றும் சேவைகளை இறக்குமதி செய்யும் இந்தியாவுக்கு செலவுகளை அதிகரிக்க வழிவகுக்கும்.
இதனால் பணவீக்கமும் அதிகரிக்கும், பொருளாதார வளர்ச்சியும் பாதிக்கும். வெளிநாட்டு கடன்களுக்கு வட்டி செலுத்துவதற்கான செலவை அதிகரிக்கும், இதன் வாயிலாக அன்னிய செலாவணி கையிருப்பிலும் பாதிப்பு ஏற்படும்.
சரிவு
இந்திய ரூபாய் மதிப்பில் ஏற்படும் சிறிய அளவிலான சரிவும் சாமானிய மக்களின் பட்ஜெட்டில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.
இதற்காக ஆர்பிஐ, மத்திய அரசு ஆகியவை ரூபாய் மதிப்பைக் கட்டுப்படுத்த அவ்வப்போது டாலர் இருப்பை மறுசீரமைப்பு செய்யும் நடவடிக்கையில் இறங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 12 காசுகள் சரிந்து ரூ.85.06 ஆக உள்ளது.