இனி இந்திய ரூபாயை 35 நாடுகளில் பயன்படுத்தலாம் - மத்திய அமைச்சர் தகவல்!

India World
By Jiyath Jan 15, 2024 02:46 AM GMT
Report

இந்திய ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த 35 நாடுகள் ஒப்புதல் மத்திய சட்டத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்திய ரூபாய் 

டெல்லியில் “இந்திய ரூபாயின் 100 ஆண்டுகால பயணம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மத்திய சட்டத் துறை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் பங்கேற்றார்.

[

அப்போது பேசிய அவர் "“அம்பேத்கர் சட்டமேதை மட்டுமல்ல, பொருளாதாரத்திலும் நிபுணத்துவம் பெற்றவர் என்பதை மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஆங்கிலேய ஆட்சியாளர்கள் இந்திய ரூபாயின் மதிப்பை குறைக்க முற்பட்டபோது அதனை எதிர்கொள்ள அம்பேத்கரின் பங்களிப்பு முக்கியமானதாக இருந்தது.

35 நாடுகள் ஒப்புதல்

லண்டன் பொருளாதார கல்வி நிலையத்தில் அம்பேத்கர் தாக்கல் செய்த இந்திய ரூபாய் தொடர்பான ஆய்வறிக்கையின் அடிப்படையில்தான் 1935-ம் ஆண்டு இந்திய ரிசா்வ் வங்கி உருவாக்கப்பட்டது.

இனி இந்திய ரூபாயை 35 நாடுகளில் பயன்படுத்தலாம் - மத்திய அமைச்சர் தகவல்! | 35 Countries Approved To Use Indian Rupee

இப்போது பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சியில் ரூபாயின் மதிப்பு ஸ்திரமாக உள்ளது. நமது ரூபாயை தங்கள் நாட்டில் பயன்படுத்த இதுவரை 35 நாடுகள் ஒப்புதல் அளித்துள்ளன.

இதன் மூலம் அந்த நாடுகளுக்குப் பயணிக்கும்போது அந்த நாட்டுப் பணம் அல்லது அமெரிக்கா டாலரைப் பயன்படுத்தாமல், இந்திய ரூபாயை பயன்படுத்திக் கொள்ள முடியும்” என்று அவர் தெரிவித்தார்.