இந்தியாவில் ஏழையானாலும் ரூபாய் மதிப்பின்படி இந்த 10 நாடுகளில் நீங்கள் பணக்காரர் தான் - லிஸ்ட் இதோ!
இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வாக இருக்கும் 10 நாடுகளை பற்றிய தகவல்.
ரூபாய் மதிப்பு
பெரும்பாலான உலக வர்த்தகம் அமெரிக்க டாலர்களை மையமாக வைத்துதான் நடைபெறுகிறது. ஆனால் சமீப காலமாக இந்தியா தனது சொந்த ரூபாய் பணத்தின் மூலமாகவே சில நாடுகளுடன் வர்த்தகம் செய்து வருகிறது.
ஒருசில நாடுகளின் பணத்தின் மதிப்பு என்பது இந்திய ரூபாயை விட உயர்வானவை என்றாலும், சில நாடுகளில் இந்திய ரூபாய் மதிப்பு உயர்வாக இருக்கிறது. அந்தவகையில் நமது இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வாக இருக்கும் 10 நாடுகளை பற்றி பார்ப்போம்.
இலங்கை
இந்தியாவின் அண்டை நாடாக உள்ள இலங்கை ஒரு தீவு நாடாக விளங்குகிறது. தமிழர்கள் அதிகளவில் வாழும் பகுதியாகவும் இலங்கை இருக்கிறது. சமீபத்தில் மாபெரும் பொருளாதார வீழ்ச்சியை எதிர்கொண்ட இலங்கையில் இந்திய ரூபாயின் மதிப்பு 3.89 இலங்கை ரூபாய் ஆகும்.
நேபாளம்
இந்தியர்கள் பாஸ்போர்ட் இல்லாமலேயே சென்றுவரக் கூடிய நாடுகளில் ஒன்றாக நேபாள நாடு உள்ளது. இங்கு இந்துக்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர். இங்கு இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.1.59 நேபாள ரூபாய் ஆகும்.
ஜப்பான்
தொழில் வளர்ச்சியில் முன்னணியில் உள்ள நாடு ஜப்பான் ஆகும். ஜப்பானியர்கள் சுறுசுறுப்பாக பணியாற்றுவதில் வல்லவர்கள். அதிகப்படியான இயற்கை பேரிடர்களை ஜப்பான் சந்தித்துள்ளது. இங்கு இந்திய ரூபாய் மதிப்பு 1.79 ஜப்பானீஸ் யென் ஆகும்.
தென் கொரியா
தென் கொரியா கிழக்கு ஆசியாவிலுள்ள ஒரு நாடாகும். புதுமையான கண்டுபிடிப்புகள் தகவல் தொழில்நுட்பத்திற்கு பெயர் பெற்ற தென் கொரியாவில் இந்திய ரூபாய் மதிப்பு 16.11 கொரியன் வோன் என்ற அளவில் உள்ளது.
கம்போடியா
கம்போடியா, 'கம்பூச்சியா' என அறியப்பட்ட ஒரு தென்கிழக்கு ஆசிய நாடாகும். புகழ்பெற்ற வழிபாட்டுத் தலமாக கருதப்படும் 'அங்கோர்வாட்' இங்குதான் உள்ளது. இந்த நாட்டில் இந்திய ரூபாய் மதிப்பு 49.42 கம்போடியன் ரியால் ஆகும்.
இந்தோனேசியா
சுமத்ரா, ஜாவா என்று சுமார் 17,000க்கும் மேற்பட்ட தீவுகளை கொண்ட நாடாக இந்தோனேசியா உள்ளது. இங்கு முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்றனர். இந்த நாட்டில் இந்திய ரூபாயின் மதிப்பு 185.35 இந்தோனேசிய ரூபியா ஆகும்.
வியட்நாம்
கடற்கரைகள், ஆறுகள் என அழகிய சுற்றுலாத்தலங்களை கொண்ட தென்கிழக்கு ஆசிய நாடாக இந்தோனேசியா விளங்குகிறது. யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட புராதன சின்னங்கள் ஏராளமாக இங்கு உள்ளன. வியட்நாமில் இந்திய ரூபாயின் மதிப்பு 293.44 வியட்னமீஸ் டோங் ஆகும்.
ஹங்கேரி
நடு ஐரோப்பாவில் உள்ள ஒரு சின்னஞ்சிறு நாடாக ஹங்கேரி உள்ளது. இங்கு யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற புராதன சின்னங்கள் ஏராளமாக உள்ளன. கிறிஸ்தவர்கள் பெரும்பான்மையாக வாழும் ஹங்கேரியில் இந்திய ரூபாய் மதிப்பு 4.41 ஹங்கேரியன் ஃபோரிண்ட் ஆகும்.
கோஸ்டாரிகா
கோஸ்டா ரிகா எரிமலைகளை அதிகம் கொண்டிருக்கும் நாடாக உள்ளது. மக்கள் மிக மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியலில் முன்னணி வரிசையில் இருக்கும் இந்நாட்டில் இந்திய ரூபாய் மதிப்பு 6.44 கோஸ்டா ரிகான் கோலன் ஆகும்.
பாராகுவே
இயற்கை வளங்கள் ஏராளமாக உள்ள பாராகுவே நாடு தென் அமெரிக்க கண்டத்தில் உள்ளது. இங்கு விவசாயம் முதன்மையான தொழிலாக உள்ளது. கோதுமை, சோயாபீன்ஸ், கரும்பு போன்றவை அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. பாராகுவே நாட்டில் இந்திய ரூபாய் மதிப்பு 87.40 பாராகுயான் கௌரானி ஆகும்.