இந்தியா நடுநிலையாக இருக்க அவசியமே இல்லை - டிரம்ப் முன்னாடியே மோடி பளீச்!
இந்தியா நடுநிலையாக இருக்கவே வேண்டியதில்லை என மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். தொடர்ந்து வாஷிங்டனில் உள்ள வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டிரம்பை பிரதமர் மோடி சந்தித்தார்.
அதன்பின் பேசிய அவர், உங்களை மீண்டும் வெள்ளை மாளிகையில் பார்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். 140 கோடி இந்திய மக்களின் சார்பாக உங்களை வாழ்த்துகிறேன். இந்திய மக்கள் எனக்கு மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க வாய்ப்பளித்துள்ளனர்.
நமது இரு நாடுகளின் முன்னேற்றம் மற்றும் செழுமையை நோக்கி நாம் ஒன்றாகப் பயணிப்போம். இந்தியா நடுநிலையாக இல்லை. இந்தியா அமைதியின் பக்கம் நிற்கிறது. புதினுடன் நான் ஏற்கனவே பேசியிருக்கிறேன். இந்த யுகம் போருக்கானது இல்லை என அவரிடம் கூறியுள்ளேன்.
அமெரிக்க பயணம்
போரை முடிவுக்கு கொண்டு வர டிரம்ப் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு நான் ஆதரவு அளிக்கிறேன். உலகின் மிக பழமையான ஜனநாயக நாடாக அமெரிக்கா உள்ளது. இந்தியா உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு ஆகும். எனவே, இந்தியாவும் அமெரிக்காவும் ஒருங்கிணைந்து வரும் போது மிக்கப்பெரிய பலம் பெறும்.
மனித குலத்தின் நலனுக்காக நாங்கள் பணியாற்றுவோம்" என்றார். பின்னர் இரு தலைவர்களும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, பேசிய பிரதமர் மோடி, அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கியுள்ள இந்தியர்களை அழைத்துக்கொள்ள தயார் எனத் தெரிவித்துள்ளார்.