குறைந்த விலையில் மது - இந்தியாவில் இங்குதான்!
இந்தியாவிலேயே மிக குறைந்த விலையில் மது கிடைக்கும் இடம் குறித்த தகவல்களை காணலாம்.
மது விலை
மது மற்றும் அதன் விலை குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, இந்தியாவிலேயே கோவாவில்தான் மிக மிக குறைந்த விலைக்கு மது விற்பனை செய்யப்படுகிறது.
புதுச்சேரியை விடவும் கோவாவில் மது பான பாட்டில்களுக்கு மிகக்குறைந்த வரி விதிக்கப்படுகிறது. ரூ. 100-க்கு விற்பனையாகும் மது பாட்டில் டெல்லியில் ரூ. 134 க்கும், கர்நாடகாவில் ரூ. 513-க்கும் விற்பனை செய்யப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
கர்நாடகாவில் மது பாட்டில்களுக்கான வரி மிக மிக அதிகம். டெல்லி மற்றும் மும்பை இடையே பிரபலமான ஸ்காட்ச் பிராண்டுகளுக்கு 20%க்கும் அதிகமான விலை ஏற்றத்தாழ்வு உள்ளது.
வரி வரம்பு
உதாரணமாக, டெல்லியில் சுமார் ரூ.3,100 விலையுள்ள பிளாக் லேபிளின் ஒரு பாட்டில், மும்பையில் தோராயமாக ரூ.4,000 விற்பனை செய்யப்படுகிறது மது மற்றும் பெட்ரோலியம் சரக்கு மற்றும் சேவை வரியின் (ஜிஎஸ்டி) வரம்புக்கு வெளியே உள்ளது.
இதன் விளைவாக நாடு முழுவதும் பல வரிகள் மற்றும் வரி விகிதங்கள் மதுபாட்டில்களுக்கு உள்ளன. இதனால் ஒவ்வொரு மாநிலத்திலும் மது பாட்டில் விலை மாறுபடுவது குறிப்பிடத்தக்கது.