மது விற்பனையில் மிதந்த மாநிலம்; இத்தனை கோடிகளா? களைகட்டிய விற்பனை
மூன்று நாட்களில் ரூ.154 கோடிக்கு மதுபானம் விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கிறிஸ்துமஸ் பண்டிகை
திருவிழா, பண்டிகை காலங்களில் மதுபானம் விற்பனை என்பது தமிழ்நாடு மட்டுமின்றி பிற மாநிலங்களிலும் அதிகரித்து வருகிறது.
அதன்படி, கேரளாவிலும் பண்டிகை நாட்களில் மது விற்பனை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருவது வழக்கம். அந்த வகையில் மதுபான கழகம் இந்த ஆண்டின் கிறிஸ்துமஸ் பண்டிகையின் மது விற்பனை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மது விற்பனை
அதில் கிறிஸ்துமஸ் பண்டிகையின் முந்தைய மூன்று நாள்களில் (22,23,24) ரூ.154 கோடியே 78 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ரூ.144 கோடியே 91 லாட்சத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. குறிப்பாக சில்லறை கடைகளில் ரூ.63 லாட்சத்து 85 ஆயிரம் வரை விற்பனை செயப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 22, 23 தேதிகளில் ரூ.80 கோடியே 4 லட்சமும், 24-ஆம் தேதியில் 70 கோடியே 74 லட்சத்திற்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.