மதுபான விற்பனையில் களமிறங்கிய Coca Cola - முதலில் எங்கு அறிமுகம் தெரியுமா?
Coca Cola நிறுவனம் மதுபான விற்பனையில் களமிறங்கியுள்ளது.
Coca Cola
கோகோ கோலா நாடெங்கும் பிரபலமான நிறுவனமாக அறியப்படுகிறது. அந்நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கென தனி ரசிகர்கள் உண்டு.
அந்த வகையில், அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் திட்டம் போட்டு கோகோ கோலா தற்போது மதுபான விற்பனையில் இறங்கியுள்ளது. அதன்படி, ரெடி-டு ட்ரிங்க் பானமான Lemon-Dou அறிமுகம் செய்துள்ளது.
Lemon-Dou
தற்போது கோவா மற்றும் மகாராஷ்டிராவின் சில பகுதிகளில் சோதனை முயற்சியைத் தொடங்கியுள்ளது. தொடர்ந்து, ஒரு சில மாநிலங்களில் மட்டும் Lemon-Dou மதுபானத்தைப் பைலட் சோதனை செய்து வருவதாக Coca-Cola செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
லெமன்-டூ என்பது ஷோச்சு (shochu) மற்றும் எலுமிச்சை சாறு கலந்த மதுபானம் என்பது பொருள். 250 மில்லி மதுபானம் 230 ரூபாய்க்கு விற்கப்பட்டு வருகிறது. ஜப்பான் நாட்டில் chuhai எனப்படும் மதுபானம் Lemon-Dou என்ற பெயரில் விற்பனையாகி வருவது குறிப்பிடத்தக்கது.