இனி கோகோ கோலா, நெஸ்லேவுக்கு தடை - அரசு அதிரடி!
இஸ்ரேலுக்கு ஆதரவு அளித்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு துருக்கி தடை விதித்துள்ளது.
இஸ்ரேலுக்கு ஆதரவு
இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையேயான போர் 1 மாதத்தைக் கடந்து நீடித்து வருகிறது. இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்துள்ளது. இதில் 60 சதவீதம் பேர் பெண்களும், குழந்தைகளும் எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையில், காசாவை சுற்றி வளைத்து தனது பீரங்கி குண்டுகளால் காசா நகரையே இஸ்ரேல் நிர்மூலமாக்கிக் கொண்டிருக்கிறது. இதற்கு எகிப்து, ஜோர்டான், சவுதி அரேபியா ஆகிய நாடுகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
துருக்கி தடை
அந்த வரிசையில், துருக்கி நாடாளுமன்றம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள உணவகங்கள், சிற்றுண்டிச் சாலைகள் மற்றும் தேநீர் விடுதிகளில் இஸ்ரேலை ஆதரிக்கும் நிறுவனங்களின் தயாரிப்புகள் இனிமேல் விற்கப்படாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் எந்த நிறுவனங்கள் தொடர்புடையவை என அடையாளப்படுத்தவில்லை. இருப்பினும், பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று கோகோ கோலா மற்றும் நெஸ்லே தயாரிப்புகளை விலக்கியுள்ளதாக கூறப்படுகிறது.