ஒரே நாளில் 750ஐ தாண்டிய கொரோனா பாதிப்பு; 4 பேர் பலி - 7 மாதங்களில் இல்லாத உச்சம்!
கடந்த 24 மணிநேரத்தில் 752 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று
கொரோனா பாதிப்பு கர்நாடகா, கேரளா உள்ளிட்ட 10 மாநிலங்களிலும், புதுச்சேரி யூனியன் பிரதேசத்திலும் உயர்ந்து வருவதாக சுகாதார அமைச்சகத்தின் சார்பில் அறிவிக்கப்பட்டது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 752 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், கர்நாடகாவில் ஒருவரும், கேரளாவில் இரண்டு நபர்களும், ராஜஸ்தானில் ஒருவரும் இறந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எகிறும் பாதிப்பு
இந்நிலையில், புதிய ஜேஎன் 1 கொரோனா வகை பொதுமக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த மாறுபாட்டின் வகைகள் இதுவரை கோவாவிலும், கேரளாவிலும் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் கடந்த ஒரு மாதத்தில் கொரோனா உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 52 சதவிகிதம் அதிகரித்துள்ளது. கடந்த 28 நாட்களில் மட்டும் 8.5 லட்சம் பேர் புதிதாக கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முதியவர்களும் இணை நோய் உள்ளவர்களும் மாக்ஸ் அணியும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.