இந்தியா-கனடா உறவு - அப்படியே பல்டி அடித்த ஜஸ்டீன் ட்ரூடோ!
இந்தியாவுடன் நெருங்கிய உறவை ஏற்படுத்த உறுதிபூண்டுள்ளதாக கனடா பிரதமர் ஜஸ்டீன் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
இந்தியா-கனடா
காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் படுகொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்தியா - கனடா இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இரு நாடுகளும் தூதரக உயர் அதிகாரியை வெளியேற உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில், மான்ட்ரேல் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜஸ்டீன், இந்தியா ஒரு வளர்ந்துவரும் பொருளாதார சக்தியாக உள்ளது. மேலும், உலக அரங்கில் அதன் முக்கியத்துவம் அதிகரித்தே வருகிறது.
ஜஸ்டீன் நிலைப்பாடு
கடந்த ஆண்டுதான் இந்தோ-பசிபிக் கூட்டுக்கொள்கையை வெளியிட்ட நிலையில், அதனுடனான உறவில் நாங்கள் கவனத்துடன் இருக்கிறோம். காலிஸ்தான் பிரிவினைவாதி கொலை வழக்கு விசாரனையில்,

கனாடாவுடன் இணைந்து இந்தியாவும் ஒத்துழைப்பு தர வேண்டும். அதே வேளையில், நாட்டின் சட்டத்தை பின்பற்றி இந்த வழக்கில் உண்மை என்ன என்பதை வெளிக்கொணர அனைத்து உதவிகளையும் இந்தியா அளிக்க வேண்டும். இந்தியாவுடனான உறவை மேலும் நெருக்கமானதாக மாற்றுவதற்கு கனடா உறுதிபூண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    