வெடிக்கும் விவகாரம்; கனடாவுக்கு செக் வைத்த இந்தியா - விசா சேவை..?

India Canada
By Sumathi Sep 21, 2023 09:29 AM GMT
Report

கனடா நாட்டு குடிமக்களுக்கான விசா சேவையை சஸ்பெண்ட் செய்து இந்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்தியா - கனடா 

காலிஸ்தான் விவகாரம் தொடர்பாக, இந்தியா - கனடா இடையே கருத்து மோதல் நிலவி வருகிறது. காலிஸ்தான் தீவிரவாதி கொல்லப்பட்டதில் இந்திய ஏஜெண்டுகளுக்கு பங்கிருப்பதாக

வெடிக்கும் விவகாரம்; கனடாவுக்கு செக் வைத்த இந்தியா - விசா சேவை..? | Indian Visa Services Canada Suspended

கனடா பிரதமர் குற்றம் சாட்டியதற்கு மத்திய அரசு கண்டனம் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து, இரு நாடுகளும் தலா ஒரு மூத்த அதிகாரியை வெளியேற்றின.

விசா சேவை

ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவின் (RAW) மூத்த அதிகாரியை நாட்டை விட்டு வெளியேறுமாறு ஒட்டாவா உத்தரவிட்டது. பதிலடியாக கனடாவின் உயர்மட்ட தூதர் ஒருவரை

வெடிக்கும் விவகாரம்; கனடாவுக்கு செக் வைத்த இந்தியா - விசா சேவை..? | Indian Visa Services Canada Suspended

"நாட்டின் உள் விவகாரங்களில் தலையிட்டதற்காகவும், இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகவும் இந்தியா வெளியேற்றியது. இந்நிலையில், கனடாவில் இருந்து இந்தியா வரும், கனடா குடிமக்களுக்கான விசா சேவையை சஸ்பெண்ட் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

முன்னதாக, அங்கு மேலும் ஒரு காலிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். இதனால், கனடாவில் உள்ள இந்திய மாணவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு மத்திய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.