இந்தியா மீதான குற்றம் மட்டும் நிரூபிக்கப்பட்டால்.. கனடா அமைச்சர் ஆதங்கம்!
இந்தியா மீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணை தொடரும் என கனடா அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இருநாட்டு உறவு
சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்னணியில் இந்தியா இருக்கலாம் என்ற கனடா குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், ந்தியா, கனடாவின் குற்றச்சாட்டை மறுத்துவருகிறது.
இதற்கிடையில், இரு நாட்டுத் தூதர்களும் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள். இந்நிலையில், கனடாவின் தேசிய பாதுகாப்புத்துறை அமைச்சர் பில் பிளேய்ர், ``இந்தியாவுடனான கனடாவின் உறவு முக்கியமானது.
அமைச்சர் ஆதங்கம்
கனடா, இந்தியாவுடனான கூட்டாண்மையைத் தொடரும். அதேநேரம் இந்தியாமீதான குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணையும் தொடரும். இந்தியாமீதான குற்றச்சாட்டுகள் உண்மை என நிரூபிக்கப்பட்டால்,
இந்தியா - கனடாவுக்குமான நமது இறையாண்மை மீறப்பட்டிருப்பது உறுதியாகும். அது கனடாவுக்கு மிகுந்த கவலையளிக்கும் செய்தியாகவே இருக்கும்.
கனடாவில் ராணுவப் பாதுகாப்பை அதிகரிக்கவும், மேலும் ரோந்துப் பணிக்கான செயல்முறை நடவடிக்கைகளை அதிகரிப்பது தொடர்பாகவும் ஆலோசனைகள் முன்மொழியப்பட்டிருப்பதாகத் தெரிவித்துள்ளார்.