700 இந்திய மாணவர்கள் வெளியேற்றம் - கனடாவில் நடந்தது என்ன?

India Canada
By Sumathi Mar 18, 2023 09:52 AM GMT
Sumathi

Sumathi

in கனடா
Report
100 Shares

700 இந்திய மாணவர்களை நாட்டை விட்டு வெளியேற்ற கனடா அரசு உத்தரவிட்டுள்ளது.

கனடா அரசு

வட அமெரிக்க நாடான கனடாவுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில், போலி ஆவணங்களை சமர்பித்து கனடாவுக்கு வந்த குற்றச்சாட்டில் 700 இந்திய மாணவர்களை அந்நாட்டு அரசு வெளியேற்ற உத்தரவிட்டுள்ளது.

700 இந்திய மாணவர்கள் வெளியேற்றம் - கனடாவில் நடந்தது என்ன? | 700 Indian Students From Canada To Be Deported

இவர்கள் அனைவரையும் பஞ்சாப் மாநிலம் ஜலந்தரைச் சேர்ந்த விசா ஏஜென்டான பிரிஜேஷ் மிஸ்ரா என்பவர் கனடாவுக்கு அனுப்பி வைத்துள்ளார். இவர் அங்கு உயர்கல்வி சேவைக்கு மாணவர்களை அனுப்பி வைக்கும் நிறுவனத்தை நடத்தியுள்ளார்.

போலி ஆவணங்கள்

2018-2022 வரை கனடாவில் உயர்கல்வி படிக்க இவர்கள் வந்த நிலையில், படிப்பு முடிந்த பின்னர் PR எனப்படும் நிரந்தர குடியிருப்பு கேட்டு அந்நாட்டு குடியேற்ற துறையிடம் விண்ணப்பித்துள்ளனர். அதுதொடர்பான ஆவணங்களை சோதித்து பார்த்த போது தான் உண்மை தெரியவந்துள்ளது.

இப்படி பெருமளவில் மாணவர்கள் மோசடி சம்பவத்தில் சிக்கியுள்ளது இதுவே முதல் முறை. இவர்கள் அனைவரும் பிரிஜேஷ் மிஸ்ராவிடம் சுமார் 20 லட்சம் வரை கட்டணம் செலுத்தியுள்ளனர். அவரை கண்காணிப்பு வலையத்திற்குள் கொண்டுவந்துள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.