இந்தியாவில் பெரிதும் வெறுக்கப்படும் உணவு இதுதான் - லிஸ்ட்டில் முதல் இடம் பிடித்த உணவு எது தெரியுமா?
இந்தியாவில் பெரிதும் வெறுக்கப்படும் உணவுகளுக்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியா
நம்முடைய அன்றாட வாழ்க்கையில் ஆரோக்கியமான உணவு என்பது ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் அல்லது மேம்படுத்தும் உணவு முறை ஆகும்.
ஆரோக்கியமான உணவு உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்தை வழங்குகிறது புரதம் போன்ற மேக்ரோநியூட்ரியண்ட்ஸ் , உயிர்ச்சத்துகள் போன்ற நுண்ணூட்டச்சத்துக்கள் மற்றும் போதுமான நார்ச்சத்து உள்ளிட்டவை சிறந்த ஆற்றலை வழங்குகிறது.
அந்த வகையில் இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை காணும் நாடு. இங்கு மாநிலங்களுக்கு ஏற்றவாறு மொழி , கலாச்சாரம், பண்பாடு, உணவு உள்ளிட்டவை வேறுபடும். இந்த நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த டேஸ்ட் அட்லஸ் என்ற அமைப்பு இந்தியாவில் அதிகம் வேண்டாம் என்று ஒதுக்கப்படும் உணவுகள் குறித்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
வெறுக்கப்படும் உணவு
அதில் இந்தியர்கள் அதிகம் வெறுக்கும் உணவுகளின் பட்டியலில் முதலாவது இடத்தில் ஜல் ஜீரா உள்ளது. இதனையடுத்து இரண்டாவது இடத்தில் கஜக், 3வது இடத்தில் தேங்காய் சாதம், 4வது இடத்தில் பண்டா பட் இடம்பெற்றுள்ளது.
தொடர்ந்து அலூ பய்ங்கன், தண்டை, அச்சப்பம், மிர்ச்சி கா சலன், மல்புவா உள்ளிட்ட உணவு வகைகள் இடம்பெற்றுள்ளன. இந்த வரிசையில் 10 ஆவது இடத்தில் உப்புமா இடம்பெற்றுள்ளது.