இந்தியாவிற்கு வந்த சரக்கு கப்பல்.. கைவரிசை காட்டிய கிளர்ச்சியாளர்கள்!

India Israel
By Vinothini Nov 20, 2023 05:41 AM GMT
Report

 சரக்கு கப்பலை கிளர்ச்சியாளர்கள் கடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

போர்

இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தியது, அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் எதிர் தாக்குதலை நடத்தியது. தற்பொழுது வரை இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதலை நடத்தி வருகிறது.

ship hijacked by yemen rebels

இந்த நிலையில், துருக்கியில் இருந்து இந்தியா நோக்கிச் சென்ற சரக்குக் கப்பல் ஒன்று ஏமனின் செங்கடல் பகுதியில் ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடத்தப்பட்டுள்ள "கேலக்ஸி லீடர்" என்ற கப்பலில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 50 பணியாளர்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

மத உணர்வை தூண்டும்.. ஹலால் முத்திரையிட்ட பொருட்களுக்கு தடை - அரசு அதிரடி உத்தரவு!

மத உணர்வை தூண்டும்.. ஹலால் முத்திரையிட்ட பொருட்களுக்கு தடை - அரசு அதிரடி உத்தரவு!

இஸ்ரேல் கண்டனம்

இந்நிலையில், இஸ்ரேலிய ராணுவம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவு ஒன்றில் இந்தக் கடத்தலை உறுதிசெய்துள்ளது. "ஏமன் அருகே தெற்கு செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் சரக்குக் கப்பல் ஒன்றைக் கடத்திதியுள்ளனர்.

இது உலகளாவிய விளைவுகளை ஏற்படுத்தும் மிக மோசமான சம்பவம். இஸ்ரேலியர்கள் உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் அந்தக் கப்பலில் பணிபுரிகின்றனர்.

கடத்தப்பட்டது துருக்கியில் இருந்து இந்தியாவுக்குச் செல்லும் கப்பல் என்றும் இஸ்ரேலிய கப்பல் அல்ல" என்று தெரிவித்துள்ளது. ஈரானின் வழிகாட்டுதலுடன் ஏமனைச் சேர்ந்த ஹவுதி கிளர்ச்சியாளர்களால் கப்பல் கடத்தப்பட்டுள்ளது என்றும் இந்தக் கடத்தலை இஸ்ரேல் கடுமையாக கண்டிக்கிறது என்றும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் தனது ட்விட்டர் பதிவில் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும்,