2 ஆயிரம் குழந்தைகள் கடத்தல் - ரஷ்யா மீது உக்ரைன் பரபரப்பு குற்றச்சாட்டு..!
RussiaUkraineWar
RussiaUkraineCrissis
RussiaKidnapChild
UkraineChildKifdnap
Kidnaping
By Thahir
2000 ஆயிரம் குழந்தைகளை கடத்தி சென்றதாக ரஷ்யா மீது உக்ரைன் திடுக்கிடும் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் பொதுமக்களை பிணையக்கைதிகளாக பிடித்து வைப்பதாக உக்ரைன் குற்றம்சாட்டி வருகிறது.
ரஷ்யா ஆதரவு கிளர்ச்சியாளர்கள் உள்ள டான்பாஸ் பகுதியில் இருந்து 2,389 குழந்தைகள் ரஷ்யாவுக்கு சட்டவிரோதமாக நாடு கடத்தப்பட்டு உள்ளதாக தெரிவித்துள்ளது.
டான்பாஸ் மாகாணத்தின் ஒரு பகுதி உக்ரைனின் கட்டுப்பாட்டிலும், மற்றொரு பகுதி ரஷிய ஆதரவு கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டி லும் உள்ளது.
உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா குழந்தைகளை குறி வைத்து கடத்தி வருவதாக திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது.