இந்தியா வல்லரசாக போகிறது; ஆனால் நாம் பிச்சை எடுக்கிறோம் - பாக். தலைவர் கொதிப்பு!

Pakistan India
By Sumathi May 01, 2024 04:11 AM GMT
Report

பாகிஸ்தான் உலக நாடுகளிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது என பாகிஸ்தான் அமைச்சர் வேதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா வளர்ச்சி

லதுசாரி கட்சியான ஜமியத் உலமா-இ-இஸ்லாம் ஃபஸ்லின் தலைவர் மவுலானா ஃபஸ்லுர் ரஹ்மான் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசினார். அவர் பேசியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது.

இந்தியா வல்லரசாக போகிறது; ஆனால் நாம் பிச்சை எடுக்கிறோம் - பாக். தலைவர் கொதிப்பு! | India Become Super Power But Pakistan Begging

அவர் பேசியதாவது, “1947-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இந்தியாவும் பாகிஸ்தானும் சுதந்திரம் பெற்றன. ஆனால், இன்று இந்தியா வல்லரசாக மாற இலக்குநிர்ணயித்து பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால், பாகிஸ்தான் திவால் ஆவதைத் தடுக்க பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறது.

இந்தியா நிலாவுக்கே போயிடுச்சி.. நாம பிச்சை எடுக்கோம் - சொன்னது நவாஸ் ஷெரீப்!

இந்தியா நிலாவுக்கே போயிடுச்சி.. நாம பிச்சை எடுக்கோம் - சொன்னது நவாஸ் ஷெரீப்!

பாகிஸ்தான் நிலை

இந்தியா வலுவான பொருளாதார வளர்ச்சியைக் கொண்டிருக்கிறது. 2024-25 நிதி ஆண்டில் 7 சதவீத வளர்ச்சியை எட்டும்என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானைப் பாருங்கள். பாகிஸ்தானில் வளர்ச்சியே இல்லை. தேக்கம்தான் இருக்கிறது. சில சக்திகள் நம் வளர்ச்சியைத் தடுத்துக் கொண்டிருக்கின்றன.

இந்தியா வல்லரசாக போகிறது; ஆனால் நாம் பிச்சை எடுக்கிறோம் - பாக். தலைவர் கொதிப்பு! | India Become Super Power But Pakistan Begging

அவைதான் அனைத்து முடிவுகளையும் எடுக்கின்றன. அரசியல்தலைவர்களான நாம் பொம்மை போல் இருக்கிறோம். எதிர்க்கட்சிகளுக்கு போராட்டம் நடத்த உரிமைஇருக்கிறது. அவற்றால் அரசையும் அமைக்க முடியும்” எனத் தெரிவித்துள்ளார்.

இங்கு உணவு, மருந்து, எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பணவீக்கம் தீவிரமாக காணப்படுகிறது. கடன் சுமை அதிகரித்துள்ள நிலையில், அத்தியாவசியப் பொருள்களைக் கூட இறக்குமதிசெய்ய முடியாத நிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.