பாகிஸ்தான் பிரதமர் உலகம் முழுவதும் சுற்றி பிச்சை எடுக்கிறார் : இம்ரான் கான் தாக்கு
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி உலகம் முழுவதும் சுற்றி வருவதாக முன்னாள் பிரதமர் இம்ரான்கான் விமர்சனம் செய்துள்ளார்.
நெருக்கடியில் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் தற்போது கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அந்நாட்டில் எரிப்பொருள் , உணவுப்பொருட்கள் ஆகியவைக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பாகிஸ்தான் தற்போதைய நிலையினை சமாளிக்க சர்வதேச நாணய நிதியத்திடம் ரூ 170 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் நிதி கேட்டுள்ளது. இவ்வாறான நிலையில் பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில்
இமரான் கான் விமர்சனம்
பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பிச்சை பாத்திரம் ஏந்தி வெவ்வேறு உலக நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். ஆனால், யாரும் அவருக்கு ஒரு பென்னி நாணயம் கூட வழங்கவில்லை என ஷெரீப்பின் சமீபத்திய வெளிநாட்டு பயணங்களை குறிப்பிட்டு பேசியுள்ளார். ஷெரீப், இந்தியாவிடம் கூட பேச்சுவார்த்தைக்காக கெஞ்சி கொண்டு இருக்கிறார்.
ஆனால், முதலில் பயங்கரவாதத்திற்கு முடிவு கட்டுங்கள் (அதன்பின் பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை பற்றி பரிசீலனை செய்யலாம்) என புதுடெல்லி அவரிடம் கூறியுள்ளது என கான் கூறியுள்ளார். சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரக ஊடக நிறுவனத்திடம் அளித்த பேட்டியின்போது, பிரதமர் ஷெரீப், இந்தியாவுடன் பேச்சுவார்த்தைக்கான தனது விருப்பங்களை வெளியிட்டார்.
இதுபற்றி இந்தியா தரப்பில் கூறும்போது, அண்டை நாடான பாகிஸ்தானுடன் நல்லுறவையே எப்போதும் இந்தியா விரும்புகிறது. ஆனால், அதுபோன்ற உறவுக்கு, பயங்கரவாதம் மற்றும் வன்முறை ஆகியவற்றில் இருந்து விடுவிக்கப்பட்ட சூழல் அந்நாட்டில் காணப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
ஷெரீப்பின் சமீபத்திய 2 நாள் ஐக்கிய அரபு அமீரக பயணத்தின்போது, தற்போதுள்ள 200 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை நீட்டிக்க அமீரகம் ஒப்புதல் அளித்ததுடன், கூடுதலாக 100 கோடி மதிப்பிலான அமெரிக்க டாலரை தருவதற்கும் ஒப்பு கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.