இந்தியா நிலாவுக்கே போயிடுச்சி.. நாம பிச்சை எடுக்கோம் - சொன்னது நவாஸ் ஷெரீப்!

Pakistan India
By Sumathi Sep 20, 2023 04:43 AM GMT
Report

 இந்தியா நிலவை அடைந்துவிட்ட நிலையில், பாகிஸ்தான் கையேந்திக் கொண்டிருப்பதாக நவாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நிலை

லாகூரில், பாகிஸ்தான் முஸ்லீம் லீக்-நவாஸ் கட்சியின் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில், வீடியோ கான்பரன்சிங் மூலம் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உரையாற்றினார்.

இந்தியா நிலாவுக்கே போயிடுச்சி.. நாம பிச்சை எடுக்கோம் - சொன்னது நவாஸ் ஷெரீப்! | Pakistan Begging India Reached Moon Nawaz Sharif

அப்போது, "இந்தியா நிலவை அடைந்துவிட்டது, ஜி20 கூட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறது. ஆனால் அதேநேரத்தில், பாகிஸ்தான் பிரதமர் நாடு, நாடகச் சென்று நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறார்.

நவாஸ் ஷெரீப் தாக்கு

இந்தியா செய்த சாதனைகளைப் பாகிஸ்தானால் ஏன் செய்ய முடியவில்லை. இதற்கெல்லாம் இங்கு யார் பொறுப்பு? அடல் பிஹாரி வாஜ்பாய் இந்தியாவின் பிரதமரானபோது, இந்தியாவிடம் பில்லியன் டாலர் மட்டுமே இருந்தது.

இந்தியா நிலாவுக்கே போயிடுச்சி.. நாம பிச்சை எடுக்கோம் - சொன்னது நவாஸ் ஷெரீப்! | Pakistan Begging India Reached Moon Nawaz Sharif

தற்போது இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 600 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது. இந்தியா இன்றைக்கு எங்கேயோ சென்றுவிட்டது. ஆனால், பாகிஸ்தான் உலக நாடுகளிடம் நிதிக்காக கையேந்திக் கொண்டிருக்கிறது எனப் பேசினார்.

2019ல் அல்அஜிசியா மில் ஊழல் வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்று தற்போது மருத்துவக் காரணங்களுக்காக லண்டனில் இருக்கும் நவாஸ் ஷெரீப், நவம்பர் 6-ம் தேதி பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து நாடு திரும்புவதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.