பாரத் என்று மாற்றினால்.. இந்தியாவின் பெயர் எங்களுக்கு - பாகிஸ்தான் கோரிக்கை!
இந்தியாவின் பெயர் மாற்றப்பட்டால் அந்த பெயர் எங்களுக்கு வேண்டும் என்று பாகிஸ்தான் கோரிக்கை விடுத்துள்ளது.
இந்தியா
சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே இந்தியாவின் பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை, தொடர்ந்து வருகிறது. அச்சமயத்தில் மாற்று பெயராக பாரத் மட்டுமன்றி இந்துஸ்தான், பாரத் வர்ஷா உள்ளிட்ட பெயர்களும் முன்வைக்கப்பட்டன.
சிந்து நதி பாயும் துணைக்கண்டத்தின் பெயர், அதனையொட்டி இந்தியாவின் வரலாறு உள்ளது. ஆனால் பாகிஸ்தானுக்கு இந்தியா என்ற பெயரை இழந்ததில் ஒரு ஆதங்கம் உள்ளது. தற்பொழுதும் சிந்து நதி பாகிஸ்தானுக்குள் உள்ளது, அதனால் இந்தியாவின் பெயருக்காக போட்டியிட்டு வருகிறது.
பாகிஸ்தான் கோரிக்கை
இந்நிலையில், தற்பொழுது இந்தியாவில் பாஜகவின் எதிர் கட்சி கூட்டணிக்கு இந்தியா என்ற பெயர் உள்ளது, அதனால் இந்த இந்தியா என்ற பெயரை பாஜகவினர் வெறுகின்றனர். மேலும், அரசு ஆவணங்கள் மற்றும் நடைமுறைகளில், இந்தியா என ஆங்கிலத்திலும், பாரத் சர்க்கார் என இந்தியிலும் குறிப்பிடப்பட்டு வருகின்றன.
அவற்றை ஒரே அடையாளமாக ’பாரத்’ என மாற்ற வேண்டியது அவசியம் எனவும் வலியுறுத்தி வருகிறார்கள். இதனையறிந்த பாகிஸ்தான் இந்தியா தனது பெயரை மாற்றினால் அதனை வரிந்துகொள்ள பாகிஸ்தான் தயாராக வேண்டும் என பாகிஸ்தான் பத்திரிக்கைகள் அந்நாட்டு அரசை வலியுறுத்தி வருகின்றனர்.