INDvAUS: அதிரடி காட்டிய ருதுராஜ்; பொளந்து கட்டிய மேக்ஸ்வெல் - ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி!

Cricket India Indian Cricket Team Australia Cricket Team Sports
By Jiyath Nov 29, 2023 04:13 AM GMT
Report

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான மூன்றாவது டி20 போட்டியில், ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றுள்ளது. 

டி20 போட்டி

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3வது டி20 போட்டி நேற்று அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள பார்சாபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

INDvAUS: அதிரடி காட்டிய ருதுராஜ்; பொளந்து கட்டிய மேக்ஸ்வெல் - ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! | India And Australia T20 Australia Won Thriller

எனவே, இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , ருதுராஜ் கெயிக்வாட் ஆகியோர் களமிறங்கினர். அதில், ஜெய்ஸ்வால் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய இஷான் கிஷன் டக் அவுட் ஆனார்.

இதனையடுத்து களமிறங்கி அதிரடியாக விளையாடிய சூர்யகுமார் யாதவ் 39 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் ஆஸ்திரேலிய பவுலர்களை துவம்சம் செய்த, ருதுராஜ் 52 பந்துகளில் சதம் அடித்து அசத்தினார். பின்னர் 57 பந்துகளில் 123 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஆட்டத்த்தின் முடிவில் இந்திய அணி மொத்தம் 222 ரன்கள் குவித்தது.

2024 IPL-ல் எம்.எஸ்.தோனி; 'அவரை மும்பை அணிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி' - நீதா அம்பானி!

2024 IPL-ல் எம்.எஸ்.தோனி; 'அவரை மும்பை அணிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி' - நீதா அம்பானி!

ஆஸ்திரேலியா வெற்றி  

இதனைத் தொடர்ந்து 223 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலிய அணியின் டிராவிஸ் ஹெட் மற்றும் ஹார்டி ஆகியோர் களமிறங்கினர். அதில், ஹார்டி 16 ரன்களில் ஆட்டமிழந்தார். தொடர்ந்து டிராவிஸ் ஹெட் 35 ரன்களில் அவுட் ஆனார்.

INDvAUS: அதிரடி காட்டிய ருதுராஜ்; பொளந்து கட்டிய மேக்ஸ்வெல் - ஆஸ்திரேலியா த்ரில் வெற்றி! | India And Australia T20 Australia Won Thriller

அடுத்தடுத்து ஆஸ்திரேலிய வீரர்கள் ஆட்டமிழந்தனர். ஆனால் மறுமுனையில் அதிரடி காட்டிய மேக்ஸ்வெல், இந்திய பவுலர்களின் பந்துகளை பவுண்டரிக்கு சிக்ஸர்களாக பறக்க விட்டார். அவர் 48 பந்துகளில் 104 எடுத்து சதம் விளாசினார்.

இறுதியில், 20 ஒவர் முடிவில் 225 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி த்ரில் வெற்றி பெற்றது. இதன்படி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 2-1 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய அணி முன்னிலை வகிக்கிறது.