2024 IPL-ல் எம்.எஸ்.தோனி; 'அவரை மும்பை அணிக்கு வரவேற்பதில் மகிழ்ச்சி' - நீதா அம்பானி!
2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்காக, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள் குறித்த தகவல்.
ஐபிஎல் தொடர்
இந்தியாவில் நடத்தப்படும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது சீசன் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. இதற்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 19ம் தேதி துபாயில் நடைபெறுகிறது.
எனவே, அணியிலிருந்து விடுவிக்கப்படும் மற்றும் தக்கவைக்கப்படும் வீரர்களின் பட்டியலை அணி நிர்வாகங்கள் சமர்ப்பிக்க ஐபிஎல் அமைப்பு கொடுத்திருந்த காலக்கெடு முடிவடைந்தது. இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், எம்.எஸ். தோனி தலைமையிலான 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
அதில், ருதுராஜ் கெய்க்வேட், தேவன் கான்வே, மொயீன் அலி, சிவம்துபே, ரவீந்திர ஜடேஜா, அஜின்கியா ரஹானே, தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷணா, முகேஷ் செளதுரி, மிட்செல் சான்ட்னர், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், சிம்ரஞ்சீத் சிங், மதீஷா பதிரானா, துஷார் தேஷ்பாண்டே, பிரசாந்த் சோலங்கி, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து மற்றும் அஜய் மண்டல் ஆகியோர் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.
வரவேற்பதில் மகிழ்ச்சி
இதனால் சென்னை ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், குஜராத் அணியின் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவை, மும்பை இந்தியன்ஸ் அணி ரூ.15 கோடிக்கு வாங்கியுள்ளது.
இந்நிலையில், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் ஹர்திக் பாண்டியா திரும்பியது குறித்து, அந்த அணியின் இணை நிறுவனர் நீதா அம்பானி கூறியதாவது "மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்பிய ஹர்திக்கை வரவேற்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம். அவர் மும்பை இந்தியன்ஸ் குடும்பத்தில் மறுபடியும் கைகோர்ப்பது சந்தோஷம்.
மும்பை இந்தியன்ஸ் அணியால் ஒரு திறமையான இளம் வீரராக கண்டெடுக்கப்பட்டதில் இருந்து இப்போது இந்திய அணியின் ஒரு நட்சத்திர வீரர் என்று ஹர்திக் பாண்ட்யா மிக உயர்ந்த நிலையை எட்டி இருக்கிறார். பாண்ட்யா மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணியின் எதிர்காலம் குறித்து நாங்கள் உற்சாகம் அடைந்துள்ளோம்" என்று அவர் தெரிவித்துள்ளார்.