மக்கள் அதிகம் நம்பும் நாடுகள் பட்டியல் - இந்தியா எங்கே இருக்கிறது பாருங்க!
மக்களின் நம்பிக்கையை பெற்ற நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.
மக்களின் நம்பிக்கை
சர்வதேச அளவில் நாடுகளை பல நிலைகளில் மதிப்பீடு செய்து அறிக்கை வெளியிடுவது வழக்கம்.
அதன்படி, எடில்மேன் என்ற அமைப்பு 2024-ம் ஆண்டுக்கான தனது 25-வது ஆண்டறிக்கையை ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்று வரும் உலக பொருளாதார மன்றத்தில் சமர்ப்பித்தது.
32 ஆயிரத்துக்கும் மேற்பட்டோரிடம் கருத்துகளைக் கேட்டறிந்து, அறிக்கை உருவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா 3வது இடம்
அந்த வகையில் வெளிநாடுகளிலும் இயங்கக்கூடிய நிறுவனங்களைக் கொண்டுள்ள நாடுகள் மீது வெளிநாட்டினர் வைக்கும் நம்பகத்தன்மை குறித்த நாடுகளின் பட்டியலில் கனடா முதலிடத்திலும், ஜப்பான், ஜெர்மனி, இங்கிலாந்து, பிரான்ஸ், அமெரிக்கா ஆகியவை அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளது. இந்தியாவுக்கு 13வது இடம்.
அரசாங்கம், வணிகங்கள், ஊடகங்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மீதான பொது மக்களின் நம்பிக்கைக்கான ஒட்டுமொத்த பட்டியலில் சீனா முதலிடம். 2வது இடத்தில் இந்தோனேஷியா. கடந்த முறை 2-ம் இடம் பிடித்த இந்தியா இம்முறை மூன்றாம் இடம் பிடித்துள்ளது.
வளரும் நாடுகள் அதிக நம்பிக்கை கொண்டவையாக மாறி உள்ளன. சீனா (77 சதவீதம்), இந்தோனேசியா (76), இந்தியா (75) மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (72).