கனடா சென்ற 20,000 இந்திய மாணவர்கள்; ஆனால், கல்லூரியில் சேரவில்லை - ஏன்?
கனடா சென்ற 20,000 இந்திய மாணவர்கள் கல்லூரிகளில் சேரவில்லை.
கல்வி விசா
கனடாவின் குடியேற்றம், அகதிகள் மற்றும் குடிமக்கள் அமைப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில், 2024ம் ஆண்டில் கல்வி விசாவில் கனடாவிற்குள் வந்த சுமார் 50,000 மாணவர்கள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் சேராமல் இருக்கின்றனர்.
இதில், கிட்டத்தட்ட 20,000 பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். கல்வி விசாவில் சென்று படிப்பில் சேராதவர்களில் 5.4 சதவீதம் நபர்கள் இந்தியர்கள் என தெரியவந்துள்ளது. சில இந்திய மாணவர்கள் கனடாவின் கல்வி விசாவை வைத்துக்கொண்டு அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறுவதாகவும் குற்றம் சாட்டப்படுகிறது.
என்ன மர்மம்?
இந்நிலையில், கல்வி நிறுவனங்களில் சேராத இந்திய மாணவர்கள் கனடாவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு முயற்சிகள் செய்யலாம்.
எனவே கல்வி விசா பெற்றுவிட்டு கல்வி நிறுவனங்களில் சேராமல் இருப்பதை தடுக்க அவர்கள் முன்கூட்டியே கல்வி கட்டணத்தை செலுத்த வைக்க வேண்டும் என்று பொருளாதாரம் மற்றும் குடியேற்றம் துறையில் நிபுணத்துவம் பெற்ற ஹென்றி லாட்டின் தெரிவித்துள்ளார்.