ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா - ஆசியாவிலேயே 3வது இடம்!

United States of America Australia Japan India
By Sumathi Sep 26, 2024 06:57 AM GMT
Report

ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளில் 3-ம் இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

ஆசியாவில் ஆதிக்கம் 

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த லோவி இன்ஸ்டிடியூட் ஆசியாவில் ஆதிக்கம் செலுத்தும் நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

india

நாடுகளின் பொருளாதாரத் திறன், ராணுவத் திறன், வெளிநாட்டு உறவு, கலாச்சாரம், எதிர்கால வளர்ச்சி அடிப்படையில் இந்தப் பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் இடத்தில் அமெரிக்காவும் இரண்டாம் இடத்தில் சீனாவும் உள்ளன.

மூன்றாம் இடத்தில் ஜப்பான் இருந்த நிலையில், தற்போது ஐப்பானைப் பின்னுக்குத் தள்ளி இந்தியா 3-வது இடம் பிடித்துள்ளது. 4-வது இடத்தில் ஜப்பான், 5-வது ஆஸ்திரே லியா, 6-வது இடத்தில் ரஷ்யா, 7-வது இடத்தில் தென் கொரியா, 8-வது சிங்கப்பூர், 9-வது இடத்தில் இந்தோனேசியா, 10-வது இடத்தில் தாய்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.

ஆசியாவிலேயே பழைய ரயில் நிலையம் இதுதான் - அதுவும் இந்தியாவில் எங்கு தெரியுமா?

ஆசியாவிலேயே பழைய ரயில் நிலையம் இதுதான் - அதுவும் இந்தியாவில் எங்கு தெரியுமா?

 இந்தியா முன்னேற்றம்

குறிப்பாக, அணுசக்தி, நவீன ரக ஏவுகணை, வலுவான கடற்படை ஆகியவை இந்தியாவை ராணுவ ரீதியாக முக்கியத்துவமிக்க நாடாக மாற்றியுள்ளது. விண்வெளி ஆராய்ச்சி, புதுப்பிக்கத்தக்க எரி ஆற்றல் கட்டமைப்பு, தகவல் தொழில்நுட்பம், டிஜிட்டல் இந்தியா, ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் வளர்ச்சி ஆகியவற்றிலும் வளர்ச்சி அடைந்து வருகிறது.

ஜப்பானை பின்னுக்கு தள்ளிய இந்தியா - ஆசியாவிலேயே 3வது இடம்! | India 3Rd Most Powerful In Asia Overtake Japan

லோவி இன்ஸ்டிடியூட் தனது அறிக்கையில் இந்தியாவில் இளைய தலை முறையினரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இது அதன் வளர்ச்சிக்கு முக்கிய காரணியாக கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.