ஆசியாவிலேயே பழைய ரயில் நிலையம் இதுதான் - அதுவும் இந்தியாவில் எங்கு தெரியுமா?
ஆசியாவிலேயே மிகப் பழமையான ரயில் அமைப்பு குறித்து பார்க்கலாம்.
மும்பை ரயில்வே
மும்பை புறநகர் ரயில்வே, இந்திய ரயில்வே மண்டலங்களான மேற்கு ரயில்வே மற்றும் மத்திய ரயில்வே மூலம் இது இயக்கப்படுகிறது.
உலகளவில் பரபரப்பான நகர்ப்புற ரயில் நெட்வொர்க்குகளில் ஒன்று. தினசரி 7.24 மில்லியனுக்கும் அதிகமான பயணிகள் பயணித்து வருகின்றனர்.
பின்னணி
191 ரயில் பெட்டிகளுடன் மின்சார மல்டிபிள் யூனிட்களால் (EMUs), 465 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த ரயில்வே அமைப்பு இயங்கி வருகிறது. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் ரயில்வேயின் தோற்றத்தை கொண்டுள்ளது.
ஆசியாவிலேயே மிகப் பழமையான ரயில் அமைப்பு இதுதான். ஏப்ரல் 16, 1853 அன்று போரி பந்தர் (தற்போது சத்ரபதி சிவாஜி டெர்மினஸ்) மற்றும் தானே இடையே 34 கி.மீ. தூரத்தில் இயக்கப்பட்டுள்ளது.
14 பெட்டிகளுடன் 57 நிமிடங்களில் பயணத்தை முடித்துள்ளது. அதன்பின், 1991ல் இந்த ரயில்வே அமைப்பு விரிவாக்கம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.