சொத்து மதிப்பு ரூ.921 கோடி.. ஜமீன் குடும்ப சுயேட்சை வேட்பாளர் - யார் இவர்?
ரூ. 921 கோடி சொத்து மதிப்பு காட்டிய சுயேட்சை வேட்பாளர் ஒருவரின் வேட்பு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
வேட்பு மனு
மதுரை மாவட்டம் தோப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணவேல வேந்தன் (50). இவர் மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிட சுயேட்சையாக வேட்புமனு தாக்கல் செய்தார்.
தனது வேட்பு மனுவில் ரூ.921 கோடி சொத்து மற்றும் தாயாரின் புடவை ரூ. 2 கோடி என சொத்து மதிப்பு காட்டியிருந்தார். மேலும், தான் திருச்சி மாவட்டத்தில், ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்றும் தெரிவித்திருந்தார்.
தள்ளுபடி
ஆனால் வேட்பு மனுக்கள் பரிசீலனையின்போது, அவரது மனு முழுமையாக பூர்த்தி செய்யப்படவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால் கண்ணவேல வேந்தன் சிறிது நேரம் தேர்தல் அலுவலரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "பட்டதாரிகள் வேட்புமனு தாக்கல் செய்ய முடியாத அளவிற்கு குளறுபடிகள் உள்ளது. இது தொடர்பாக நீதிமன்றத்தை நாடவுள்ளேன்" என்று தெரிவித்தார்.