ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் - பெரும் குழப்பத்தில் ராமநாதபுரம்!

Tamil nadu O. Panneerselvam Ramanathapuram Lok Sabha Election 2024
By Jiyath Mar 26, 2024 01:50 PM GMT
Report

ராமநாதபுரம் தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராக, அதே பெயரை கொண்ட 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

ஓ.பன்னீர்செல்வம் 

பாஜக கூட்டணி சார்பில் ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக தனது ஆதரவாளர்களுடன் நேற்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் - பெரும் குழப்பத்தில் ராமநாதபுரம்! | 5 Nominations In The Name Of O Panneerselvam

இதனையடுத்து சுயேச்சை வேட்பாளராக மதுரை மாவட்டம் மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் பன்னீர்செல்வம் (ஓ.பன்னீர்செல்வம்) என்பவர் வேட்புமனு தாக்கல் செய்தார். 

மக்களவை தேர்தல் - வீரப்பன் மகளின் அசையும், அசையா சொத்து மதிப்பு தெரியுமா?

மக்களவை தேர்தல் - வீரப்பன் மகளின் அசையும், அசையா சொத்து மதிப்பு தெரியுமா?

பெரும் குழப்பம் 

இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வம் என்ற பெயரில் இன்று ஒரே நாளில்  3 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இதனால் அந்த தொகுதியில் ஒரே பெயரில் போட்டியிடும் சுயேட்சை வேட்பாளர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வம் பெயரில் 5 பேர் வேட்புமனு தாக்கல் - பெரும் குழப்பத்தில் ராமநாதபுரம்! | 5 Nominations In The Name Of O Panneerselvam

இந்த 5 பேரும் சுயேட்சையாக தனிச் சின்னத்தில் போட்டியிட உள்ளதால், தேர்தலில் பெரும் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு எதிராகவும், வாக்காளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தவும் இதுபோன்று செயல்படுவதாக ஓ.பன்னீர்செல்வம் தரப்பு தரப்பு குற்றம் சாட்டியுள்ளது.