மக்களவை தேர்தல் - வீரப்பன் மகளின் அசையும், அசையா சொத்து மதிப்பு தெரியுமா?

Naam tamilar kachchi Tamil nadu Seeman Krishnagiri Lok Sabha Election 2024
By Jiyath Mar 26, 2024 11:13 AM GMT
Report

கிருஷ்ணகிரி தொகுதி வேட்பாளர் வித்யா ராணியின் அசையும், அசையா சொத்து மதிப்பு விவரம்.

நாம் தமிழர் கட்சி 

2024 மக்களவை தேர்தல் நாடு முழுவதும் ஏப்ரல் 19-ம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுவையில் ஏப்ரல் 19-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4-ம் தேதி நடைபெறவுள்ளது.

மக்களவை தேர்தல் - வீரப்பன் மகளின் அசையும், அசையா சொத்து மதிப்பு தெரியுமா? | Vidya Rani S Movable Immovable Property Value

இதனை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளது. மேலும், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தமிழக தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது. இதனிடையே 'கரும்பு விவசாயி' சின்னம் வேறு கட்சிக்கு ஒதுக்கப்பட்டதால், நாம் தமிழர் கட்சிக்கு 'மைக்' சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கீடு செய்தது.

ஆட்சிக்கு வந்தால் தரமான மதுபானம், பீர்கள் விற்பனை - முன்னாள் முதல்வர் வாக்குறுதி!

ஆட்சிக்கு வந்தால் தரமான மதுபானம், பீர்கள் விற்பனை - முன்னாள் முதல்வர் வாக்குறுதி!

வித்யா ராணி 

இதனையடுத்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உட்பட 40 தொகுதிகளுக்கான நாம் தமிழர் வேட்பாளர்களை, அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று முன்தினம் அறிமுகம் செய்தார். இந்த 40 வேட்பாளர்களில் 20 பேர் பெண் வேட்பாளர்கள் ஆவர். 

மக்களவை தேர்தல் - வீரப்பன் மகளின் அசையும், அசையா சொத்து மதிப்பு தெரியுமா? | Vidya Rani S Movable Immovable Property Value

மேலும், கிருஷ்ணிகிரியில் வீரப்பன் மகள் வித்யா ராணி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று வேட்புமனு தாக்கல் செய்த வித்யா ராணியிடம், நகைகள் உட்பட அசையும் சொத்தாக ரூ.6.15 லட்சமும், அசையா சொத்து இல்லை எனவும் கையிருப்பாக ரூ.25,000 உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.