இந்தியா முழுக்க யார் ஒட்டு கேட்டாலும் என் சின்னம் (மைக்) முன்பு தான் - சீமான்!
எவர் ஒட்டு கேட்டாலும் என் சின்னம் முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
பரப்புரை கூட்டம்
விருதுநகர் மக்களவை தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் கௌசிக் என்பவர் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக விருதுநகர் வெள்ளக்கோட்டையில் தேர்தல் பரப்புரை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்த்தில் கலந்து கொண்டு பேசிய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் "நீட் என்பதை வேறு எங்கேயாவது போய் நீட்டு என துணிவோடு சொல்ல இங்கு ஒரு ஆண்மகன் இல்லை.
இங்கு எல்லோருடைய கைகளும் கரை படிந்த கைகள் வருமான வரித்துறை அமலாக்கத்துறை ரெய்டுக்கு பயந்து அனைவரும் கைகட்டி நிற்கிறார்கள். பாஜக இந்தியாவையே பத்தாண்டுகள் ஆண்ட கட்சி.
[
வளர்ந்து விட்டோம்
22 மாநிலங்களில் ஆட்சி செய்யும் பெரிய கட்சி. ஒரு சின்னப் பையன் சீமானை பார்த்து அவன் சின்னத்தில் எதற்கு ஆட்டம் காட்டுகிறாய். கூட்டத்தில் யாராவது ஒருவர் உன்னை எதிர்த்தால் நீ வளர்ந்து கொண்டிருக்கிறாய் எனப் பொருள்.
ஒரு கூட்டமே உன்னை எதிர்த்தால் நீ வளர்ந்து விட்டாய் எனப் பொருள். நாங்கள் வளர்ந்து விட்டோம் அதனால் நடுங்குகிறாய். அந்த பயம் எல்லாருக்கும் இருக்க வேண்டும். சின்னத்தை எடுத்து விட்டதாக நினைப்பார்கள்.
ஆனால் இன்று என் சின்னத்தில் தான் நீ ஓட்டு கேட்டுக் கொண்டிருக்கிறாய். இந்தியா முழுக்க எவர் ஒட்டு கேட்டாலும் என் சின்னம் முன்பு நின்று தான் ஓட்டு கேட்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.