IND vs BAN-மைதானத்தில் இந்த தவறு செய்தால் இந்தியாவுக்கு தான் ஆபத்து.. கிரிக்கெட் வீரர் எச்சரிக்கை!

Indian Cricket Team Bangladesh
By Vidhya Senthil Sep 18, 2024 07:50 AM GMT
Report

சேப்பாக்கம் மைதானத்தில் களிமண்ணைக் கலந்து பிசிசிஐ தயார் செய்து வருவதாகச் செய்திகள் வெளியாகி உள்ளது.

இந்தியா– வங்கதேசம்

இந்தியா– வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை (செப். 19) சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக கேப்டன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணியும், நஜ்முல் ஷண்டோ தலைமையிலான வங்கதேச அணி வீரர்கள் கடந்த இரண்டு நாள்களாக தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

indian cricket team

மேலும் இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் 9-ஆவது தொடர் இது ஆகும். நேருக்கு நேர் இரு அணிகளும் மோதியதில் 13 டெஸ்ட் ஆட்டங்களில் 11-இல் இந்தியா வென்றுள்ளது. 2 ஆட்டங்கள் டிராவில் முடிவடைந்தன. இதுவரை வங்கதேச அணி ஒரு டெஸ்டில் கூட இந்தியாவை வென்றதில்லை .

இந்த நிலையில் இந்தியா– வங்கதேசம் இடையேயான போட்டியின் போது மைதானத்தில் தவறு செய்தால், இந்தியாவுக்குத் தான் ஆபத்து இருப்பதாக முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சுரேக்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றிய ஜெய்ஸ்வால் - கடுப்பில் கம்பீர்!

வெளிநாட்டு பெண்ணுடன் சுற்றிய ஜெய்ஸ்வால் - கடுப்பில் கம்பீர்!

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது : வங்கதேச அணியில் ஷகிபுல் ஹசன், மெஹந்தி ஹசன்,தைஜூல் இஸ்லாம் என தலைசிறந்த மூன்று சுழற் பந்துவீச்சாளர்கள் இருக்கிறார்கள்.அதுமட்டுமில்லாமல் முஸ்பிகுர் ரஹீம் என்ற சுழற் பந்துவீச்சை எளிதில் எதிர்கொள்ளும் பேட்ஸ்மேன் இருக்கின்றார்.

முதல் டெஸ்ட் போட்டி

இதனால் சுழற் பந்துவீச்சுக்குச் சாதகமான மைதானத்தைத் தயாரித்தால் அது இந்தியாவுக்குத் தான் பிரச்சனையைக் கொடுக்கும்.இதேபோன்று இந்தியா மைதானங்களில் புற்களை அதிகமாக வைத்து வேகப்பந்து வீச்சுக்குச் சாதகமான மைதானத்தையும் நம்மால் தயாரிக்க முடியாது.

bcci

ஆனால் பந்து திரும்பும்போது சுழற் பந்துவீச்சாளர்களை எதிர்கொள்ள இந்திய பேட்ஸ்மேன்கள் அண்மைக்காலமாகத் தடுமாறி வருகிறார்கள். மேலும் வங்கதேச அணியில் சிறந்த பந்துவீச்சாளர்கள் இருப்பதால் இந்திய அணி இம்முறை வங்கதேசத்தை வீழ்த்துவது கடினமாகத் தான் இருக்கும்.

எனவே என்னைக் கேட்டால் கொஞ்சம் பேட்டிங் இருக்கிறது சாதகமான மைதானத்தை இந்தியா தயாரிக்க வேண்டும். அப்போதுதான் பேட்ஸ்மேன்கள் வங்கதேச சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராகத் தடுமாற மாட்டார்கள் என்று சஞ்சய் மஞ்சுரேக்கர் கருத்து தெரிவித்துள்ளார்.