Star Sports கிட்ட சொல்லியும் நிறுத்தல....தனியுரிமை மீறல் இது - கொந்தளிக்கும் ரோகித்

Rohit Sharma Mumbai Indians IPL 2024
By Karthick May 19, 2024 11:06 AM GMT
Report

தன்னுடைய வீடியோ ஒன்று வெளியான நிலையில், ரோகித் சர்மா கண்டனம் தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ரோகித் சர்மா

மும்பை அணி இந்த ஆண்டு கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. கேப்டன் பதவியில் ரோகித் இருந்து நீக்கப்பட்டதும் கலவையான விமர்சனங்களை பெற்றது.

Mumbai Indians 2024

ரோகித் - ஹர்திக் இருவருக்கு இடையேயும் சரியான புரிதல் இல்லை என்றெல்லாம் செய்திகள் வெளியான நிலையில், மும்பை அணி தொடரில் இருந்து முதல் அணியாக வெளியேறியுள்ளது.

ரோகித் பதிவு

இந்த சூழலில், ரோகித் பேசும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலான நிலையில், பின்னர் delete செய்யப்பட்டது. இச்சூழலில், அது குறித்து பதிவு ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அப்பதிவில்,

மும்பை தொடர்ந்து இந்திய அணிக்கும் கேப்டனாகும் ஹர்திக் - சத்தமில்லாமல் ஓய்வு பெரும் ரோகித்!

மும்பை தொடர்ந்து இந்திய அணிக்கும் கேப்டனாகும் ஹர்திக் - சத்தமில்லாமல் ஓய்வு பெரும் ரோகித்!

கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கை மிகவும் ஊடுருவக்கூடியதாகிவிட்டது, இப்போது கேமராக்கள் பயிற்சியின் போது அல்லது போட்டி நாட்களில் எங்கள் நண்பர்கள் மற்றும் சக ஊழியர்களுடன் தனியுரிமையில் நாம் செய்யும் ஒவ்வொரு அடியையும் உரையாடலையும் பதிவு செய்கின்றன.

rohit sharma tweet in star sports video issue

எனது உரையாடலைப் பதிவு செய்ய வேண்டாம் என்று ஸ்டார் ஸ்போர்ட்ஸ் கேட்டுக் கொண்டாலும், அது அப்போதும் ஒளிபரப்பப்பட்டது, இது தனியுரிமையை மீறுவதாகும். பிரத்தியேகமான உள்ளடக்கத்தைப் பெற வேண்டிய அவசியம் மற்றும் பார்வைகள் மற்றும் ஈடுபாட்டின் மீது மட்டுமே கவனம் செலுத்துவது ஒரு நாள் ரசிகர்கள், கிரிக்கெட் வீரர்கள் மற்றும் கிரிக்கெட் இடையே உள்ள நம்பிக்கையை உடைக்கும்.


Let better sense prevail என குறிப்பிட்டுள்ளார்.