மும்பை தொடர்ந்து இந்திய அணிக்கும் கேப்டனாகும் ஹர்திக் - சத்தமில்லாமல் ஓய்வு பெரும் ரோகித்!
இந்திய அணிக்கு அடுத்த கேப்டனாக ஹர்திக் பாண்டியா அறிவிக்கப்படாமல் என எதிர்பார்க்கப்படுகிறது.
உலகக்கோப்பை டி20
அமெரிக்கா மற்றும் மேற்கு இந்திய நாடுகளில் வரும் ஜூன் 1-ஆம் முதல் உலகக்கோப்பை டி20 தொடர் துவங்கவுள்ளது. கிரிக்கெட் ரசிகர்களின் பெரும் கவனத்தை பெற்றுள்ள இந்த தொடருக்கான இந்திய அணி விரைவில் அறிவிக்கப்பட்டது.
ரோகித் சர்மா தலைமையிலான அணியில் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அதே போல மாற்று வீரர்களாக சுப்மன் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஹர்திக் - ரோகித் விவகாரம்
இந்த அணியில் ஹர்திக் பாண்டியா இடம்பெறுவாரா? என்ற பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. காரணம் மும்பை அணியில் இருவருக்குள்ளும் இருக்கும் பிரச்சனைகள். ஹர்திக் பாண்டியா மும்பை அணிக்கு கேப்டனாக நியமாக்கப்பட்டது முதலே இரு வீரர்களுக்கு மத்தியிலும் பிரச்சனை இருப்பதாக தெரிகிறது.
அணிக்குள் இருந்த புகைச்சல், அணியின் விளையாட்டிலும் வெளிப்பட்டுள்ளது. முதல் அணியாக இந்த வருட ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறியுள்ளது மும்பை அணி. இதில், இருவருக்குமே சம பங்கு உள்ளது.
குஜராத் அணியை கோப்பையை அழைத்து சென்ற ஹர்திக் பாண்டியா ஒரு கேப்டனாக மட்டுமின்றி, வீரராகவும் சொதப்பியுள்ளார். பேட்டிங் பௌலிங் என இரண்டிலும் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
கேப்டனாகும் ஹர்திக்
அதே நேரத்தில் ஒரே ஒரு சதம் மட்டுமே அடித்துள்ள ரோகித் மற்றபடி பெரிய ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. அவரின் தொடர்ந்து மோசமான ஃபார்மில் தான் உள்ளார். ஆனால், பிரச்சனைகளை தாண்டி ஹர்திக் பாண்டியா இந்திய அணியின் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டார்.
இந்த சூழலில் தான், 37 வயதாகும் ரோகித் விரைவில் டி20 போட்டியில் இருந்து ஓய்வை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு அடுத்தபடியாக அணியை வழிநடத்த ஹர்திக் பாண்டியா தான் நியமிக்கப்படுவார் என பலரும் எதிர்பார்த்து காத்துள்ளனர்.
ரோகித் சர்மா, விராட் போன்றவர்கள் ஒருநாள் உலகக்கோப்பை தொடருக்காக கவனம் செலுத்திய நிலையில், அப்போது அணிக்கு கேப்டனாக ஹர்திக் பாண்டியா தான் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.