ஒரே நாடு ஒரே ஜெர்ஸி !! காவி + பளு - கலவையான விமர்சனம் பெரும் இந்திய அணி ஜெர்ஸி
ஜெர்ஸி உலகக்கோப்பை தொடருக்காக இந்திய அணியின் ஜெர்ஸி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
உலகக்கோப்பை டி20
பெரிதும் எதிர்பார்க்கப்படும் டி20 உலகைக்கோப்பை கிரிக்கெட் தொடர் வரும் ஜூன் 1-ஆம்தேதி துவங்கவுள்ளது. மேற்கு இந்திய தீவுகள் மற்றும் அமெரிக்கா நாடுகளில் நடைபெறும் இந்த தொடரில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன.
இந்த தொடருக்கான இந்திய அணி அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில் விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்று வீரர்களாக சுப்மன் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
ஜெர்ஸி
இந்த தொடருக்கான இந்திய வீரர்களின் சீருடை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. adidas நிறுவனம் எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோவில்,
One jersey. One Nation.
— adidas (@adidas) May 6, 2024
Presenting the new Team India T20 jersey.
Available in stores and online from 7th may, at 10:00 AM. pic.twitter.com/PkQKweEv95
ஒரு ஜெர்சி. ஒரு தேசம். புதிய டீம் இந்தியா டி20 ஜெர்சியை வழங்குகிறோம் என குறிப்பிட்டுள்ளது. இந்த சீருடையில் ஆரஞ்சு மற்றும் ப்ளூ நிறம் இடம்பெற்றுள்ள நிலையில், இதனை கண்ட ரசிகர்கள் தங்களது விமர்சனத்தை சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.