அவர் யார்கரை ஆட ஆளே இல்லை - விரைவில் எழுச்சி பெறுவார்!! தமிழக வீராங்கனை வருத்தம்
உலகக்கோப்பை இந்திய அணியில் நடராஜனை சேர்க்காதது பெரும் விமர்சனத்தை வைத்து வருகிறார்கள்.
இந்திய அணி
உலகக்கோப்பைக்கான இந்திய அணி அண்மையில் அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தலைமையிலான அணியில்,
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்று வீரர்களாக சுப்மன் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
எழுச்சி பெறுவார்
இதில், வேகப்பந்துவீச்சாளரான நடராஜன் இடம்பெறாததை பலரும் விமர்சித்து வருகிறார்கள். ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பாக விளையாடி வரும், அவரை எடுக்காதது குறித்து முன்னாள் வீரர்களும் கேள்விகளை எழுப்பி வருகிறார்.
இச்சூழலில், நடராஜன் இல்லாததை குறித்து இந்திய அணியில் விளையாடி வரும் தமிழகத்தை சேர்ந்த நிரஞ்சனா நாகராஜன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
கோவையில் நடைபெற்ற தனியார் கிரிக்கெட் பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டித் தொடரில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நிரஞ்சனா நாகராஜன் பேசும் போது, தற்போதைய இந்திய கிரிக்கெட்டில் ஆண்களுக்கு நிகராக பெண்களுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என குறிப்பிட்டு, மகளிர் கிரிக்கெட் புதிய புரட்சியை ஏற்படுத்தி இருப்பதாகவும் கூறினார்.
தமிழ்நாடு கிரிக்கெட் வாரியமும் பெண்களுக்கு நல்ல முக்கியத்துவம் அளிப்பதாக சுட்டிக்காட்டிய அவர், விரைவில் தமிழகத்தை சேர்ந்த மூன்று நான்கு பெண்கள் இந்திய அணியில் இடம் பெறுவார்கள் என உறுதிபட கூறினார்.
தொடர்ந்து உலகக்கோப்பை இந்திய அணி குறித்து பேசிய அவர், நடராஜன் இடம்பெறாதது ஏமாற்றம் தான் என கூறி, விரைவில் அவர் பெரிய அளவில் எழுச்சி பெறுவார் என தெரிவித்து நடராஜனின் யார்க்கரை அடித்து கொள்ள ஆள் இல்லை என பெருமிதம் கூறினார்.