நடராஜனை எடுத்திருக்கணும்...என்ன பலி ஆடா? இந்திய அணி தேர்வு - சீரும் ஸ்ரீகாந்த்!
உலகக்கோப்பைக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்திய அணி
ரோகித் சர்மா தலைமையிலான அணி அறிவிக்கப்பட்டது முதலே கலவையான விமர்சனங்கள் சமூகவலைத்தளங்களில் தென்படுகிறது. அவரவர் ரசிகர்கள் இந்த வீரரை ஏன் தேர்வு செய்யவில்லை என கடுமையாக விளாசி வருகிறார்கள்.
ரோகித் சர்மா (கேப்டன்), விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்ட்யா(துணை கேப்டன்), ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் பட்டேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹல், அர்ஷிதீப் சிங், ஜஸ்பிரீத் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
மேலும், மாற்று வீரர்களாக சுப்மன் கில், கலீல் அகமது, அவேஷ் கான், ரிங்கு சிங் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
அந்த வரிசையில் இந்திய அணியின் முன்னாள் தேர்வாளரும், முன்னாள் வீரருமான ஸ்ரீகாந்த் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். என்ன பலி ஆடா? இந்திய அணி தேர்வில் ரிங்கு சிங் என் தேர்வாகவில்லை. எப்படி அவரை விட்டார்கள் என்றே புரியவில்லை.
பலி ஆடா?
இளம் வீரர் ஜெய்ஸ்வாலை இல்லாமல் ரிங்கு சிங்கை தேர்வு செய்திருக்கலாம். மிகப்பெரிய அநியாயம் இது. அதே போல அணியில் எதற்கு 4 ஸ்பின்னர்கள்? கும்பலோடு சேர்ந்து கோவிந்தா போடும் மாதிரி. இது என்ன மாதிரியான தேர்வு? அணியில் தேர்வாகாத ரிங்கு சிங் என்ன பலி ஆடா?
அணியில் தேர்வாகியுள்ள ரன்களை வாரி வழங்கும் வள்ளல் முகமது சிராஜுக்கு பதிலாக தமிழக வீரரான நடராஜனையும், Totally out of form'ஆக இருக்கும் சுப்மன் கில்லிற்கு பதிலாக சென்னை அணியின் கேப்டன் ருதுராஜை ரிசர்வில் வைத்திருக்கலாம் என்றார்.