இதனை நீ ஜெயித்தாக வேண்டும்!! உத்தரவிட்ட தோனி - தவிக்கும் ருதுராஜ்!!
சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் முன்னாள் கேப்டன் தோனியிடம் இருந்து பல அறிவுரைகளை பெற்று வருகின்றார்.
சென்னை சூப்பர் கிங்ஸ்
நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய கேப்டன் ருதுராஜ் தலைமையில் விளையாடி வருகின்றது. சென்னை அணி இது வரை விளையாடிய 9 போட்டிகளில் 5'இல் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளது.
Play off சுற்றிற்கு தகுதி பெற சென்னை அணி பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. மீதமுள்ள 4 போட்டிகளில் சென்னை அணி 3'இல் வெற்றி பெற்றாக வேண்டும். இன்று சென்னை அணி பேட்டிங்கில் பலமாக இருக்கும் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது.
நீ வென்றாக வேண்டும்
இது வரை 9 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ள ருதுராஜ் ஒரு முறை கூட டாஸ் வென்றதில்லை. அது பெரும் சிக்கலாக சென்னை அணிக்கு இருக்கின்றது.
டாஸ் வெல்வதும் அணியின் வெற்றி முக்கியம் என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு தெரியும். இந்நிலையில், டாஸ் ஜெயிப்பது குறித்து தனக்கு முன்னாள் கேப்டன் தோனி அறிவுரை வழங்கியதாக ருதுராஜ் பேசியுள்ளார். அவர் இது குறித்து கூறும் போது, டாஸை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஆனால், அதனை நீ வென்றாக வேண்டும்.
அதற்காக பயிற்சி எடு என தோனி கூறியதாக தெரிவித்த ருதுராஜ், அப்போது முதல் தான் Dugout'இல் டாஸ் போட்டு பயிற்சி செய்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.