ருதுராஜ் ஆடியது ரொம்பவே சுயநலமிக்க ஆட்டம் - Dressing ரூமில் தோனி சொன்ன பாய்ண்ட்
2 ரன்களில் தொடர்ந்து 2-வது முறையாக சதம் அடிக்கும் வாய்ப்பை தவறவிட்டார் சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ்.
சென்னை பேட்டிங்
ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் மட்டுமே இழந்து 212 ரன்களை குவித்தது. அணியின் கேப்டன் ருதுராஜ் 98 (54) எடுத்து கடைசியில் ஆட்டமிழந்தார்.
லக்னோ அணிக்கு எதிராக சதமடித்து அசத்திய ருதுராஜ் தொடர்ந்து 2-வது முறையாக சதமடிக்கும் வாய்ப்பை 2 ரன்களில் இழந்தார். இந்த போட்டியில் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி சீரான இடைவேளையில் விக்கெட் இழந்து கடைசியில் 134 ரன்களில் ஆல் அவுட்டானது.
சென்னை அணி 2 போட்டிகளுக்கு பிறகு மீண்டும் வெற்றி பாதைக்கு திரும்பியது. சென்னை அணியின் கேப்டன் ருதுராஜ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். ஆனால், சில ரசிகர்கள் ருதுராஜ் மீது குற்றச்சாட்டு ஒன்றையும் வைத்தனர். அதாவது 43 பந்தில் 80 ரன்னை அடித்த ருதுராஜ், அடுத்த 18 ரன்களை அடிக்க 12 பந்துகளை எடுத்துக் கொண்டார் என்ற குறிப்பிடுகிறார்கள்.
சுயநலமிக்க ஆட்டம்
இது குறித்து சென்னை அணியின் முன்னாள் கேப்டன் தோனி ட்ரெஸ்ஸிங் ரூமில் டீம் மீட்டிங்கில் ருதுராஜிடம் பேசியதாக கூறப்படுகிறது. ருதுராஜின் ஆட்டம் சிறப்பாக இருந்தது என்றும் கடைசி நேரத்தில், அவசரப்பட்டு அவுட் ஆகாமல், நிதானமாக ருதுராஜ் ஆடினார்.
இதனை சுயநலமிக்க ஆட்டம் என்றுதான் சொல்வார்கள். ஆனால், அதனை நாம் காதில் போட்டுக்கொள்ள கூடாது'' என தோனி பாராட்டியதாக தகவல் வெளிவந்துள்ளது.