IPL வரலாற்றிலேயே முதல் வீரர் - யாருமே நெருங்க முடியாத சாதனை செய்த "தல" தோனி
நேற்று ஹைதராபாத் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் சென்னை அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
சென்னை வெற்றி
2 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியடைந்து புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்திற்கு தள்ளப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று ஹைதரபாத் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி களமிறங்கிய சென்னை அணியில், கேப்டன் ருதுராஜ் 98(54), மிச்சேல் 52(32), துபே 39*(20) என அதிரடியாக ரன் குவிக்க, 20 ஓவர்களில் சென்னை அணி 212/3 ரன்களை குவித்தது.
பின்னர் 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என இலக்கை கொண்டு களமிறங்கிய ஹைதராபாத் அணி, டிராவிஸ் ஹெட் 13(7), அபிஷேக் சர்மா 15(9), அன்மோல்ப்ரீத் சிங் 0(1), ஐடென் மார்கரம் 32(26) என அடுத்தடுத்து அவுட்டாகினர். சென்னை அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், ஹைதராபாத் அணி 18.5 ஓவர்களில் 134 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது.
தோனி சாதனை
இந்த வெற்றியின் மூலம் சென்னை அணி, 9 போட்டிகளில் 5 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.
இந்த போட்டியில் சென்னை அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி இதுவரை ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் எந்த வீரரும் செய்திராத சாதனையை செய்துள்ளார்.
150 ஐபிஎல் போட்டிகளில் வெற்றி பெற்ற ஒரே கிரிக்கெட் வீரர் என்ற பெருமையை அவர் நிகழ்த்தியுள்ளார்.
2008 ஆம் ஆண்டு முதல் இதுவரை 259 போட்டிகளில் விளையாடி இருக்கும் அவர், 150 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். தோனிக்கு அடுத்த இடத்தில் ஜடேஜா மற்றும் ரோகித் சர்மா உள்ளனர். இருவரும் இது வரை 133 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளனர்.