கொரோனா எதிரொலி - தமிழகத்தில் ஊரடங்கா? ஆலோசிக்கும் முதல்வர்!
கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர்.
கொரோனா
கூடுதல் கட்டுப்பாடுகளை விதிப்பது தொடர்பாக அதிகாரிகளுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசிப்பார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் தினசரி கொரோனா பாதிப்பு 14 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருகிறது.
தமிழகத்தில் தினசரி கொரோனா தொற்று 2000ஆயிரம் பேரை தாண்டி பதிவாகி வருகிறது. இந்த நிலையில் கொரோனா தொற்று முடிவுக்கு வரவில்லை என்று உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழக்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியுள்ளார்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். கொரோனா தொற்று அதிகரித்தாலும் 5% பேர் மட்டுமே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். இதனால் தீவிர கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டிய தேவையில்லை.
தடுப்பூசி முகாம்
31வது தடுப்பூசி முகாம் வரும் ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ளது. மக்கள் தடுப்பூசி முகாமை முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி செலுத்துவது, முகக்கவசம் அணிவது மட்டுமே கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்கான சிறந்த வழிமுறை.
கல்வி நிலையங்களில் தொற்று அதிகரித்து வரும் நிலையில், வகுப்பறைகளில் முகக்கவசம் அணிந்து தனி மனித இடைவெளி விட்டு மாணவர்கள் அமர வைக்க சுகாதாரத் துறை சார்பில் கல்வித்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
லாக்டவுன்
இதனிடையே கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் பள்ளிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
வகுப்பறைகள் காற்றோட்ட வசதி கொண்டதாக இருக்க வேண்டும் எனவும் பள்ளி நிர்வாகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
மீண்டும் லாக்டவுன் அமலாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மகன் செய்த பாலியல் வன்கொடுமைகள் - ஆதாரங்களை அழித்த தந்தை!