தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..!

COVID-19 Chennai
By Thahir Jun 25, 2022 04:50 PM GMT
Report

தமிழகத்தில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

அதிகரிக்கும் கொரோனா தொற்று

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. நேற்று தினசரி கொரோனா பாதிப்பு 1,359- ஆக இருந்த நிலையில் இன்று தொற்று பாதிப்பு 1,382- ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் இதுவரை தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை 34 லட்சத்து 66 ஆயிரத்து 872- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து மேலும் 617- பேர் குணம் அடைந்துள்ளனர்.

தமிழகத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா தொற்று..! | Corona Infection Increase In Tamil Nadu

கொரோனா பாதிப்புக்கு இன்று உயிரிழப்பு எதுவும் இல்லை. தொற்று பாதிப்பைக் கண்டறிய கடந்த 24 மணி நேரத்தில் 24,981- மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

தலைநகர் சென்னையில் 607 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 6,677- ஆக உயர்ந்துள்ளது.