நளினி, ரவிச்சந்திரனை விடுதலை செய்ய முடியாது : சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு
விடுதலை செய்யக்கோரி நளினி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் தங்களை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
2018 ல் தீர்மானம்
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, முருகன், ரவிச்சந்திரன் உள்ளிட்டோரை முன்கூட்டியே விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அமைச்சரவை கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தீர்மானம் நிறைவேற்றியது.
இந்த தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தின் மீது ஆளுநர் எந்த முடிவும் எடுக்கவில்லை. இந்த நிலையில் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தன்னை விடுதலை செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் நளினி வழக்கு தொடர்ந்தார்.
மனுக்களை தள்ளுபடி செய்த நீதி மன்றம்
அதேபோல, ரவிச்சந்திரனும் விடுதலை செய்ய கோரி வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்குகளை எல்லாம் தலைமை நீதிபதி முனீஸ்வர்நாத் பண்டாரி, நீதிபதி என்.மாலா ஆகியோர் விசாரித்தனர்.அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து கடந்த 6-ந்தேதி உத்தரவிட்டனர்.
இந்தநிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை இன்று காலை 10.30 மணிக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், விடுதலை செய்யக்கோரி நளினி மற்றும் ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
மேலும் இந்த வழக்கு தொடர்பாக உச்சநீதி மன்றத்தை நாடுமாறு நீதிபதிகள் கூறினர் அரசியல் சாசனம் 142-வது பிரிவின் கீழ் சுப்ரீம் கோர்ட் தனது சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்தது போல், நளினியையும், ரவிச்சந்திரனையும் விடுதலை செய்து உத்தரவிட முடியாது எனவும் நீதிபதிகள் கூறியுள்ளனர் .
நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு