தமிழகத்தில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரிப்பு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்துள்ள நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தலைமைச் செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
முதலமைச்சர் ஆலோசனை
தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமை செயலகத்தில் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கொரோனா தொற்று அதிகரிப்புக்கான காரணங்கள் குறித்து ஆலோசனையில் முதலமைச்சர் அதிகாரிகளிடம் கேட்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 200க்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில், வெளிமாநிலங்களில் இருந்து வருவோர்களை கண்காணிப்பது,
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10.30 மணிக்கு ஆலோசனை மேற்கொள்கிறார்.
இந்த ஆலோசனை கூட்டத்தில் சுகாதராத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்,தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் தமிழக காவல்துறை தலைவர் சைலேந்திர பாபு ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர்.