திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் திடீர் IT ரெய்டு - இறுதியில் நடந்தது இதுதான்!
திருமாவளவன் தங்கி இருந்த வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டனர்.
திருமாவளவன்
சிதம்பரம் மக்களவைத் தொகுதியில், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் மீண்டும் போட்டியிடுகிறார். அங்கு நடேசன் நகரில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முருகானந்தம் வீடு உள்ளது.
எனவே, திருமாவளவன் முருகானந்தத்தின் வீட்டில் தங்கி பரப்புரை செய்து வருகிறார். இந்நிலையில், கடலூர் பிரிவு வருமான வரித்துறை உதவிஆணையர் பாலமுருகன் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அங்குசென்று, வீட்டில் உள்ள அனைத்து அறைகளையும் சோதனை செய்தனர்.
ஐடி ரெய்டு
திருமாவளவன் தங்கி இருக்கும் அறையை நீண்டநேரம் சோதனை செய்தனர். ஆனால் எதுவும் கைப்பற்றப்பட வில்லை. பின்னர் அவர்கள் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.
இதுகுறித்து பேசியுள்ள திருமாவளவன், இது வெளிப்படையான அச்சுறுத்தல் எனத் தெரிவித்தார். வருமான வரி சோதனையின்போது, திருமாவளவன் காட்டுமன்னார்கோவிலில் பிரச்சாரத்தில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.