ஐடி ரெய்டு.. 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடியாக இறங்கிய அதிகாரிகள் - பரபரக்கும் சென்னை!
சென்னையில் பல இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திவருகின்றனர்.
ஐடி ரெய்டு
தமிழகத்தில் சமீப காலமாக வருமான வரித்துறை அதிகாரிகள் பல இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். அதில் தொழில் நிறுவனங்கள் மற்றும் அரசியல்வாதிகளுக்கு சொந்தமான இடங்களில் சோதனை மேற்கொள்கின்றனர்.
அந்தவகையில் சென்னையில் உள்ள தனியார் நிறுவனமான ஸ்டீல் கம்பெனிக்கு சொந்தமான 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இன்று காலை முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
எதையாவது கிளப்பிவிட்டு குளிர்காயலாம்னு நினைக்கின்றனர்.. அது மட்டும் நடக்காது - எஸ்.பி.வேலுமணி காட்டம்!
அதிகாரிகள் அதிரடி
இந்நிலையில், சென்னை, ஆயிரம் விளக்கு, எழும்பூர், வில்லிவாக்கம், மாதவரம், மண்ணடி, தாம்பரம், குன்றத்தூர் உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று அதிகாலை முதல் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
சோதனையும், விசாரணையும் முழுமையாக முடிவடைந்த பின்னரே, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள், பணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என்று தெரியவந்துள்ளது.