சென்னையில் 40 இடங்களில் வருமான வரித்துறை அதிரடி சோதனை!
பல இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகிறது.
சோதனை
கடந்த சில நாட்களில் வருமான வரித்துறை பல இடங்களில் சோதனை மேற்கொண்டு வருகிறது. இதில் சென்னையில் 10க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டது. பின்னர் 30க்கும் மேற்பட்ட வாகனங்களில் சோதனை நடத்தினர்.
துரைப்பாக்கம், பள்ளிக்கரணை ,நீலாங்கரை, எண்ணூர், ஓஎம்ஆர், நாவலூர் உள்ளிட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர்.
வரி ஏய்ப்பு புகார்
இந்நிலையில், தமிழ்நாடு மின்வாரியத்திற்கு கன்வேயர் பெல்ட் உட்பட உபகரணங்களை சப்ளை செய்து வரும் நிறுவனங்கள் தொடர்புடைய 40 இடங்களில் வருமானவரித்துறை சோதனை நடத்தியது. வரி ஏய்ப்பு புகாரில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் சோதனை நடப்பதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.
அந்த புகாரின் பேரில் சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் 10க்கு மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். பிளக்ஸ் இந்தியா செல்போன் உதிரிபாக உற்பத்தி நிறுவனம் தொடர்புடைய இடங்களிலும் வருமானவரித்துறை சோதனை நடத்தி வருகிறது.