60 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை : காரணம் என்ன?

By Irumporai May 02, 2023 07:21 AM GMT
Report

சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட சுமார் 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

 வருமான வரித்துறை சோதனை:

சென்னை,காஞ்சிபுரம் உள்ளிட்ட 60 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர், இந்த நிலையில் சென்னை தி.நகரில் இயங்கி வரும் காஞ்சிபுரம் வரமகாலட்சுமி பட்டுசேலை நிறுவனம் மற்றும் கடைகளில் வருமானவரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும் 5 பேர் கொண்ட குழு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.

60 இடங்களில் வருமானவரித் துறையினர் சோதனை : காரணம் என்ன? | Income Tax Department Checked 60 Places

 60 இடங்களில் சோதனை :

காஞ்சிபுரம் காந்தி சாலையில் உள்ள வரமகாலட்சுமி பட்டு சேலை கடையிலும் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். மகாலட்சுமி கடையின் உரிமையாளர் கோபிநாத் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளராக உள்ளார். வரி ஏய்ப்பு செய்ததாக வந்த தகவலின் அடிப்படையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

தமிழகம், ஆந்திராவில் சாய் சில்க்ஸ் காலமந்திர் குழுமத்தில் உள்ள 60 இடங்களில் சோதனை நடைபெறுகிறது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம் மட்டுமல்லாமல் ஆந்திரா, தெலுங்கானாவில் உள்ள 60 கடைகளில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.