காங்கிரஸை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் செக் - வருவாய்துறை நோட்டீஸ்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு வருவாய்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
வருவாய்துறை நோட்டீஸ்
லோக்சபா தேர்தல் இன்னும் ஓரிரு வாரங்களில் ஆரம்பிக்க உள்ளது. இதற்காக நாடு முழுக்க உள்ள அனைத்து கட்சிகளும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு உள்ளன.
இந்நிலையில், வருமானவரித் துறை அதிகாரிகள் காங்கிரஸ் கட்சியின் வருமான வரி கணக்குகளில் தவறுகள் இருப்பதாகக் கூறி ரூ.200 கோடி அபராதம் விதித்திருந்தது.
கம்யூனிஸ்ட் கட்சிக்கு செக்
தொடர்ந்து, நிலுவைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்ற வருமான வரி மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம், அவர்களின் கணக்குகளை முடக்கியது. இந்தச் சூழலில் இப்போது ரூ.1700 கோடி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
2017-18 முதல் 2020-21 வரையிலான ஆண்டுகளுக்கான வருமான வரி மற்றும் அபராதம் ஆக இந்த ₹1,700 கோடியைச் செலுத்த வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தற்போது, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமைக்கும் வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்பொழுது பழைய பான் கார்டை பயன்படுத்தியதற்காக ரூ.11 கோடி நிலுவைத் தொகையை செலுத்துமாறு குறிப்பிட்டுள்ளது.