சீட் வாங்க மட்டும் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது..! திமுக அமைச்சரின் கருத்தால் சர்ச்சை..!
திமுக காங்கிரஸ் கூட்டணி வலுவாகவே இருந்து வரும் சூழலில், திமுகவின் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
சீட் வாங்க மட்டும்
சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வரும் வீடியோவில், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் உயர்கல்வித்துறை அமைச்சரான ராஜகண்ணப்பன் பேசியிருப்பது, சீட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவே காங்கிரஸ் கட்சி நடத்தப்படுகிறது என்று அதிரடியாக தெரிவித்துள்ளார்.
மேலும், அதில் என்ன பிரயோஜனம் என்றும் உழைக்கணும் என்று கூறி, மக்களுக்கு நல்லது செய்யனும்'னு கட்சி நடத்துறது இல்லை என்று விமர்சிக்கும் வகையில் பேசிய ராஜகண்ணப்பன், எலெக்ஷன் வந்த உடனே எட்டிப்பாக்குறது என்று கூறி, இது மக்கள் மத்தியில் எடுபடுவதில்லை என்று அந்த வீடியோவில் பேசியுள்ளார்.
திமுக - காங்கிரஸ் கூட்டணி
இந்த கருத்தை அமைச்சர் ராஜகண்ணப்பன், புதுச்சேரியில் திமுக சார்பில் நடைபெற்ற மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க கூட்டத்தில் பேசினார். தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி கட்சி குறித்தே திமுக அமைச்சர் சர்ச்சையாக பேசியிருப்பது கடும் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கின்றது.
திமுக - காங்கிரஸ் கூட்டணி வலுவாக இருப்பதாக கூறப்படும் சூழலில், தேர்தல் நெருங்கும் சூழலில் இது போன்ற கருத்துக்கள் சர்ச்சையாவது வழக்கமே. ஏற்கனவே, அதிமுக காங்கிரஸ் கட்சியை கூட்டணிக்கு அழைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.